Advertisement

கொல்கத்தாவின் வெற்றி நடையை தடுக்குமா டெல்லி?

கடந்த சில சீசன்களில் டெல்லி அணிக்காக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் இப்போது அதே அணிக்கு எதிராக ஆடவிருப்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கும் 19-வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் இன்று மோதுகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை நடந்த 28 போட்டிகளில் கொல்கத்தா 16 போட்டிகளிலும், டெல்லி அணி 12 போட்டிகளிலும் வென்றுள்ளது.

image

வெற்றியை தொடருமா கொல்கத்தா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 வெற்றி, ஒரு தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி நல்ல ஃபார்மில் இருந்தாலும் கடந்த முறை பேட்டிங்கில் தடுமாறியதை மறுக்க முடியாது. ஒரு ஆட்டத்தில் ஆண்ட்ரோ ரஸலும் மற்றொரு ஆட்டத்தில் பேட் கம்மின்ஸும் தான் காப்பாற்றினர். எனவே கொல்கத்தா பேட்ஸ்மேன்களில் ஒரு சிலர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். தொடக்க வீரராக களமிறங்கும் ரஹேனாவும் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். இதனால் பாபா இந்தரஜித், ஆரோன் பிஞ்ச் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.

image

சரிவில் இருந்து மீளுமா டெல்லி?

மும்பைக்கு எதிராக வெற்றியுடன் இந்த சீசனை தொடங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அதன் பிறகு குஜராத், லக்னோவுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. குறிப்பாக லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் கைவசம் விக்கெட்டுகள் இருந்தும் 150 ரன்களை கூட விரட்ட முடியாமல் போனது. டெல்லி அணி பேட்ஸ்மேன்கள், சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் சரிகின்றது. இதனால் வார்னர், ரிஷப் பண்ட், பொவேல் போன்ற வீரர்கள் பேட்டிங்கில் கவனம் செலுத்தினால் மட்டுமே அணியில் வெற்றி பெற முடியும்.

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா, ஆண்ட்ரோ ரஸ்ல், பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், உமேஷ் யாதவ், சலாம், வருண் சக்ரவர்த்தி

டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர், பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான், ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, ரஹ்மான்

இதையும் படிக்கலாம்: சாம்பியன்கள் இப்படியா விளையாடுவது? தொடர் தோல்வியில் சிஎஸ்கே! -அடுத்தது என்ன?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments