Advertisement

கேகேஆர்-க்கு எதிராக நோ லுக் சிக்ஸர்! குட்டி ஏபிடியாக கொண்டாடப்படும் இளம் வீரர்-யார் இவர்?

ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை அணியின் இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் விளாசிய நோ-லுக் சிக்ஸர் “மிஸ்டர் 360 டிகிரி” என்று கொண்டாடப்படும் ஏபி டி வில்லியர்ஸை நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஐபிஎல் 2020 சீசனின் 14வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் பாட் கம்மின்ஸின் அதிரடியால் கொல்கத்தா வெற்றி வாகை சூடி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. மும்பை தரப்பில் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினார்கள். ஆனால் தென்னாப்பிரிக்க அண்டர் 19 நட்சத்திரமான டெவால்ட் ப்ரீவிஸ், தனது முதல் ஐபிஎல் அறிமுகப் போட்டியில் , உற்சாகமான ஆட்டத்தின் மூலம் அனைத்து பிரபலங்களையும் கவர்ந்தார்.

Image

ஏபி டி வில்லியர்ஸைப் போலவே அவரது பேட்டிங் பாணிக்காக ஏற்கனவே “குட்டி ஏபிடி” என்று அழைக்கப்படுகிறார். நேற்றைய போட்டியில் ப்ரீவிஸ் 19 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் பல சிக்ஸர்களுடன் 29 ரன்கள் எடுத்தார். மிடில் ஓவர்களில் சிறிது நேரம் மட்டுமே பேட்டிங் செய்த அவர் மிஸ்டரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியின் பந்துகளை சிக்ஸர்களாக மாற்றி அனைவரையும் திகைக்க வைத்தார். தான் எதிர்கொண்ட முதல் பந்து வீச்சிலேயே அட்டாகிங் ஆட்டத்தை ஆடத்துவங்கினார்.

ஸ்பின்னர் பந்தை லெக் சைடில் டிரிஃப்ட் செய்தார், அது எவ்வளவு தூரம் சென்றது என்று கூட பார்க்காமல் பேட்டர் ஸ்டாண்டில் அசால்ட்டாக நின்று கொண்டிருந்தார். தனது திறமையை வெளிப்படுத்தும் இளம் தென்னாப்பிரிக்க பேட்டரிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அடிக்கப்பட்ட “நோ-லுக் சிக்ஸர்” இது. ப்ரீவிஸால் தனது ஸ்கோரை 29 ரன்களுக்கு மேல் நீட்டிக்க முடியவில்லை என்றாலும், வரும் ஆட்டங்களில் மும்பையின் இளம் நட்சத்திரமாக அவர் உயர்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments