Advertisement

4-வது இடத்திற்கு முன்னேறுமா சன்ரைசர்ஸ் ஹைதராபாத்? இன்று டெல்லியுடன் மோதல்

புள்ளிப்பட்டியலில் முன்னேறவும், ப்ளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்கவும் இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக கருதப்படுவதால், இவ்விரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டும்.

15வது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றுடன் 49 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 50-வது போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

image

இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 5 வெற்றி 4 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘ப்ளே ஆஃப்’ சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் வென்று நான்காவது இடத்திற்கு முன்னேற ஹைதராபாத் அணி தீவிர முனைப்பு காட்டும். பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா (324 ரன்கள்), எய்டன் மார்க்ரம் (263 ரன்கள்), ராகுல் திரிபாதி (228 ரன்கள்), கேன் வில்லியம்சன் (195 ரன்கள்) அமர்க்களப்படுத்துகின்றனர். பவுலிங்கில் உம்ரான் மாலிக், நடராஜன், புவனேஷ்வர் குமார் பலம் சேர்க்கின்றனர்.

image

மறுபுறம் இந்த தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி  அணி 4 வெற்றி 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.  அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது மிக அவசியம். பேட்டிங்கில் டேவிட் வார்னர் (264 ரன்கள்), பிருத்வி ஷா (259 ரன்கள்), ரிஷப் பந்த் (234 ரன்கள்) மிரட்டுகின்றனர். பவுலிங்கில் குல்தீப் யாதவ் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் எக்கச்சக்க ரன்களை அள்ளிக் கொடுக்கிறார்கள். இதனால், பந்துவீச்சைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் டெல்லி அணி இருக்கிறது.

புள்ளிப்பட்டியலில் முன்னேறவும், பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்கவும் இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக கருதப்படுவதால், இவ்விரு அணிகளும் சிறப்பாக ஆடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

image

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

டெல்லி கேபிட்டல்ஸ்: 1.பிருத்வி ஷா, 2.டேவிட் வார்னர், 3.மிட்செல் மார்ஷ், 4.ரிஷப் பந்த் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), 5.லலித் யாதவ், 6.ரோவ்மன் பவல், 7.அக்சர் படேல், 8.ஷர்துல் தாக்கூர், 9.குல்தீப் யாதவ், 10.முஸ்தபிஜுர் ரஹ்மான், 11.சேதன் சகாரியா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 1.கேன் வில்லியம்சன் (கேப்டன்), 2.அபிஷேக் ஷர்மா, 3.ராகுல் திரிபாதி, 4.எய்டன் மார்க்ரம், 5.நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), 6.ஷஷாங்க் சிங், 7.வாஷிங்டன் சுந்தர்/ஜே சுசித், 8.புவனேஷ்வர் குமார், 9.மார்கோ ஜான்சன், 10.உம்ரான் மாலிக், 11.நடராஜன் / கார்த்திக் தியாகி

இதையும் படிக்கலாம்: சிஎஸ்கேவுக்கு 7வது தோல்வி ! மங்கியது 'பிளே ஆஃப்' வாய்ப்பு - அசத்திய ஆர்சிபி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments