மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ்க்கு பிறகு பேசிய சென்னை கேப்டன் தோனி “ஜடேஜா இடத்தை யாராலும் நிரப்ப முடியாது!” என்று உருக்கமாக பேசியுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் மகேந்திரசிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத உள்ளன. பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க கட்டாய வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் களமிறங்குகிறது சென்னை அணி. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங் தேர்வு செய்தார்.
டாஸ்க்கு பின்னர் பேசிய சென்னை கேப்டன் தோனி, “கடந்த சில போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தது எங்களுக்கு பலன் அளித்தது. நாங்கள் அதே பிளேயிங் லெவனுடன் விளையாடுகிறோம். எந்த மாற்றமும் செய்யவில்லை. ஜட்டு (ஜடேஜா) போன்ற ஒருவர், வெவ்வேறு கலவையான ஆட்டங்களை முயற்சிக்க உதவுபவர்களில் ஒருவர். அவர் இடத்தை நிரப்புவது யாராலும் முடியாது. அவரது இடத்தில் யாராலும் சிறப்பாக களமிறங்க முடியும் என்று நினைக்க வேண்டாம். அந்த அம்சத்தில் மாற்று இல்லை. நிறைய ஆபத்தில் இருக்கும்போது, எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், நீங்கள் உங்கள் பணியை செய்ய வேண்டும் மற்றும் செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.” என்று பேசினார்.
சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரும் முன்னாள் கேப்டனுமான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தே விலகுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. சென்னை அணி நிர்வாகத்துடன் அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக வதந்தி பரவிய நிலையில் ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வதை நிறுத்தி புதிய சர்ச்சையை ஏற்படுத்தி கிளப்பி இருந்தது. இந்நிலையில் ஜடேஜாவுக்கு ஆதரவாக தோனி பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிக்கலாமே: அன்று ரெய்னா! இன்று ஜடேஜா! நாளை..? திட்டமிட்டு கட்டம் கட்டுகிறதா சிஎஸ்கே நிர்வாகம்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments