Advertisement

செஸ் ஒலிம்பியாட்: நாளை முதல் சென்னையில் பயிற்சி முகாம்

செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம், நாளை தொடங்கி வரும் 17 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.

44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ள நிலையில், ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பாக பங்கேற்கும் A பிரிவு அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நாளை முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தியாவின் பிரபல செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த், இஸ்ரேல் நாட்டை சார்ந்த கிராண்ட் மாஸ்டர் கெல்ஃபாண்ட் ஆகியோர் வீரர்களுக்கு பயிற்சி வழங்க உள்ளனர். மேலும் இந்திய A பிரிவின் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஸ்ரீநாத் நாராயணன் மற்றும் அபிஜித் குண்டே இருவரும் பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிக்கலாம்: புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடித் திருவிழா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments