Advertisement

டென்னிஸ் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் நட்சத்திர வீரர் ஜோகோவிச்

டென்னிஸ் தரவரிசையில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் முன்னணி வீரர் நோவக் ஜோகோவிச் தரநிலையில் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இத்தாலி ஓபன் டென்னிஸ் காலிறுதி ஆட்டத்தில் கனடா வீரர் ஃபெலிக்ஸ் ஆகர் அலியாஸ்ஸிம் உடன் மோதினார். டை பிரேக்கர் வரை சென்ற இரண்டு செட்களையும் 7-5, 7-6 என்ற கணக்கில் ஜோகோவிச் போராடி வென்றார். இதன்மூலம், தரவரிசையில் முதலிடத்தை ரஷ்ய வீரர் மெத்வதேவுக்கு விடுவதில் இருந்து ஜோகோவிச் தப்பினார்.

Novak Djokovic: 'We have a rule in tennis on the prohibition of...'

டென்னிஸ் வாழ்க்கையில் தமது புதிய மைல்கல்லை அடைவதற்கான வாய்ப்பு இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சுக்கு கிட்டியுள்ளது. அடுத்து அவர் களமிறங்க உள்ள அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால், அது ஜோகோவிச்சின் ஆயிரமாவது வெற்றியாக அமைய உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments