Advertisement

தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆடவர் அணி வரலாற்றிலேயே முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரின் அரையிறுதி போட்டியில் டென்மார்க் அணிக்கு எதிராக விளையாடிய இந்திய ஆடவர் அணி 3க்கு 2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று 73 ஆண்டுகளில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

India script Thomas Cup history, beat Denmark 3-2 in thriller to reach maiden final - Sports News

மற்றொரு அரையிறுதி போட்டியில் இந்தோனேஷியா, ஜப்பானை வீழ்த்தியது. தாமஸ் கோப்பையில் பேட்மிண்டன் போட்டியில் இதுவரை 14 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்தோனேஷியாவை, இந்திய ஆடவர் அணி நாளை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ள உள்ளது.




Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments