Advertisement

வெறும் 13 இன்னிங்ஸ்தான்! கோலியின் சாதனையை அடித்து நொறுக்கிய பாபர் அசாம்

ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக அதிவேகமாக 1,000 ரன்களை கடந்தவர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்துள்ளார் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நேற்று நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 305 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 49.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின்  கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இது பாபர் அசாமின் ஹாட்ரிக் சதமாகும்.

image

மேலும் நேற்றைய போட்டியில் 103 ரன்கள் அடித்த போது பாபர் அசாம் புதிய சாதனையை படைத்துள்ளார். அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக அதிவேகமாக 1,000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையை விராட் கோலி வைத்திருந்தார். அவர் 17 இன்னிங்ஸ்களில் அடித்திருந்தார். ஆனால் பாபர் அசாம் வெறும் 13 இன்னிங்ஸ்களிலேயே அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

தற்போது வரை 86 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 17 சதங்களை அடித்துள்ளார். பாபர் அசாம் தற்போது ஐசிசியின் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் நம்பர் 1 பேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மூன்று வடிவங்களிலும் நம்பர்.1 பேட்டராக மாறுவது தான் தன்னுடைய கனவு என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கூறியிருக்கிறார்.

 இதையும் படிக்க: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா?


Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments