Advertisement

’என் கேட்சை மிஸ் செய்த பின் இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுக்க நினைத்தேன’ - டஸ்சென்

ஷ்ரேயாஸ் ஐயர் தன்னுடைய கேட்சை பிடிக்காமல் கோட்டை விட்டதே தங்களுடைய வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துவிட்டதாக  தென்னாப்ரிக்க வீரர் வான் டெர் டஸ்சென் கூறியுள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட தென்னாப்ரிக்கா அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 212 ரன்கள் எடுத்த போதும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

தென்னாப்ரிக்க அணியின் வான் டெர் டஸ்சென் மற்றும் டேவிட் மில்லர் ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 131 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தது. வான் டெர் டஸ்சென் 46 பந்துகளில் 75 ரன்களும், டேவிட் மில்லர் 31 பந்துகளில் 64 ரன்களு குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இந்நிலையில், தன்னுடைய விக்கெட்டை வீழ்த்த தவறியபோதே இந்திய அணிக்கு அதிக விலைகொடுக்க வேண்டுமென்று தான் எண்ணியதாக தென்னாப்ரிக்க வீரர் வான் டெர் டஸ்சென் தெரிவித்தார்.

image

ஷ்ரேயாஸ் ஐயரால் கேட்சை தவறவிட்ட பிறகு, அடுத்த 15 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார் வான் டெர் டஸ்சென். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments