Advertisement

இறுதிவரை போராடிய இந்திய பவுலர்கள் - 3-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சஹார் ஆகிய ஐந்து புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதற்குமுன்பு ஒரே போட்டியில் 1980 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 வீரர்கள் களமிறங்கியிருந்தனர்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் இந்திய அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களை எடுத்தது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் அவிஷ்கா பெர்னான்டோ சிறப்பாக விளையாடி 76 ரன்கள் எடுத்தார். தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்த பனுகா ராஜபக்ச, 65 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். 39 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து இலங்கை அணி வெற்றி பெற்றது. எனினும் மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அறிமுகப் போட்டியில் விளையாடிய ராகுல் சஹார் 3 விக்கெட்டுகளையும், சக்காரியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments