Advertisement

க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதி: இந்தியா vs இலங்கை 2வது டி20 போட்டி ஒத்திவைப்பு

இந்தியா-இலங்கை அணிகள் இடையே இன்று இரவு நடக்கவிருந்த இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

image

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதலாவது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று, 1-0 என்னும் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெறவிருந்தது. ஆனால் இந்திய வீரர் க்ருணால் பாண்ட்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

image

முன்னதாக, இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்த காரணத்தினால் இந்தத் தொடரே திட்டமிடப்பட்ட தேதியில் இருந்து தாமதமாகத்தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments