Advertisement

பதக்க நம்பிக்கை அளிக்கும் இந்திய கோல்ஃப் வீராங்கனை.. அதிதி அசோக் நிகழ்த்திய சில சாதனைகள்!

ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது 

ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான தனிநபர் ஸ்ட்ரோக் விளையாட்டில் 3வது சுற்றுக்குப் பிறகு இந்திய கோல்ப் வீராங்கனை அதிதி அசோக் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர், டென்மார்க்கின் எமிலி கிறிஸ்டனுடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்துள்ளார்.

அதிதி அசோக்கின் அதிரடியான ஆட்டம், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த போட்டியில் அதிதி அசோக் பதக்கம் வென்றால், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய கோல்ஃப் வீராங்கனை என்ற தலைப்பை பெறுவார். இந்நிலையில் இவர் படைத்துள்ள ஐந்து சாதனைகளை இங்கு பார்க்கலாம்.

image

அதிதி அசோக்கிற்கு டோக்கியோ 2020, முதல் ஒலிம்பிக் விளையாட்டு அல்ல. இதற்கு முன்பாக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா கோல்ஃப் வீராங்களையாக பங்கேற்றுள்ளார். அதிதி அசோக் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றபோது 18 வயதில், ஒலிம்பிக் பெண்கள் கோல்ஃப் போட்டியில் பங்கேற்ற இளைய வீரராகவும், ஒலிம்பிக்கில் முதல் இந்திய கோல்ஃப் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அதிதி அசோக் தனது 17 வயதில், லேடிஸ் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது மொராக்கோவில் உள்ள லல்லா ஐச்சா டூர் ஸ்கூலை வென்ற இளைய மற்றும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

கேடி கோல்ப்ஸ் கிளப்களை எடுத்துச் செல்லும் ஒரு நபராக இருந்து போட்டியின் போது மற்ற உதவிகளை வழங்குகிறார் அதிதி அசோக்கின் தந்தை பண்டிட் குட்லமணி அசோக், கோல்ப் வீரரின் கேடி. பண்டிட் குட்லமணி அசோக் தனது மகள் அதிதி அசோக் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

image

அதிதி அசோக் 2016 ஆம் ஆண்டு லேடிஸ் ஐரோப்பிய டூரில் 'ரூக்கி ஆஃப் தி இயர்' என்ற விருதை வென்றார். சுற்றுப்பயணத்தின் முதல் ஆண்டில் ஸ்பெயினின் நூரியா இடுரியோஸை வென்று தொடர்ச்சியாக இரண்டு பட்டங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். அவர், ரியோ ஒலிம்பிக்கில் கோல்ஃப் விளையாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய முதல் இந்தியப் பெண்மணி ஆன பிறகு, இந்தியன் ஓபன் மற்றும் கத்தார் லேடிஸ் ஓபனில் அதிதி அசோக் இரண்டு பட்டங்களை வென்றுள்ளார்.

எல்பிஜிஏ என்பது பெண்கள் தொழில்முறை கோல்ஃப் சங்கத்தைக் குறிக்கிறது. இது பெண் கோல்ஃப் வீரர்களுக்கான ஒரு அமெரிக்க அமைப்பு. அதிதி அசோக் இந்தியாவின் முதல் எல்பிஜிஏ வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் 2017-ல் இச்சாதனை படைத்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments