Advertisement

உயிர்காக்கும் கருவிகளின் துணையுடன் சிகிச்சையில் கிறிஸ் கெய்ர்ன்ஸ்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் உயிர்காக்கும் கருவிகளின் துணையுடன் ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

51 வயதான அவர் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் இருந்த போது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதய பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும் அவரது உடல்நிலை அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பதாக நியூசிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரை சிட்னிக்கு இடம் மாற்றி சிகிச்சை கொடுக்கவும் முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

image

நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்ட், 215 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2004-இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் அவர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments