Advertisement

இந்தியாவிற்கு எதிராக புது பிளே கார்டு.. மொயின் அலிக்கு அழைப்பு விடுத்த இங்கிலாந்து

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் இங்கிலாந்து வீரர் மொயின் அலி. ஆல்-ரவுண்டரான மொயின் அலியை இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட அழைத்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். 

image

உடனடியாக அவர் சக அணி வீரர்களுடன் இணைந்து வரும் 12-ஆம் தேதி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாக உள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பயிற்சி செய்யவும் உள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 

கடைசியாக அவர் கடந்த பிப்ரவரியில் இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தார். அந்த போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ஐந்து போட்டிகளா கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி மழையின் பாதிப்பு காரணமாக டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆல் ரவுண்டரான மொயின் அலி 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2831 ரன்களை எடுத்துள்ளார். இதில் 5 சதம், 14 அரைசதம் அடங்கும். பந்துவீச்சை பொறுத்தவரை 61 போட்டிகளில் 189 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். 5 முறை 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். ஒரு முறை 10 விக்கெட் எடுத்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments