Advertisement

ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி: முதல் பாதியில் இந்தியா - பெல்ஜியம் சமநிலை

டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தியா - பெல்ஜியம் அணிகள் இடையிலான ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்து சமநிலையில் இருக்கின்றன.

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் பிரிவுக்கான அரையிறுதி ஹாக்கி போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் போட்டி தொடங்கிய 2 ஆவது நிமிடத்திலேயே பெல்ஜியம் அணிக்கு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்திய பெல்ஜியம் வீரர் லூசிபார்ட் அபாரமாக விளையாடி கோல் அடித்தார். மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் பெல்ஜியம் முதல் கோல் அடித்தது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

image

ஆனால் விடாமல் துரத்திய இந்தியாவுக்கு பெல்ஜியம் வீரர் செய்த தவறால் பென்லாட்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது, இதனை சிறப்பாக பயன்படுத்திய ஹர்மன்ப்ரீத் சிங் இந்தியாவுக்கான முதல் கோலை பதிவு செய்தார். பின்பு மீண்டும் சில நிமிடங்களிலேயே இந்தியாவுக்கு தன்னுடைய பிரமாதமான "பேக் ஷாட்" மூலம் 2 ஆவது கோலை பதிவு செய்தால் மண்தீப்சிங். இதனையடுத்து முதல் கால் ஆட்டத்தில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

பின்பு அடுத்த கால் மணி நேர ஆட்டம் நடைபெற்றது. அதில் பெல்ஜியம் வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினார்கள் அப்போது இந்திய வீரர்களின் தவறால் பெல்ஜியம் அணிக்கு பெனால்ட்டி கார்னர் வழங்கப்பட்டது. அதனை சாதகமாக்கிய பெல்ஜியம் வீரர் ஹென்ரிக்ஸ் அறிபுதமான ஷாட் அடித்து பெல்ஜியத்துக்கான 2 ஆவது கோலை பதிவு செய்தார். இதனையடுத்து ஹாக்கி அரையிறுதியின் முதல் பாதியில் இந்தியா - பெல்ஜியம் தலா 2 கோல் அடித்து சமநிலையில் இருக்கின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments