Advertisement

டி20 உலகக் கோப்பை : இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு!

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடுகின்றன. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

இரு அணிகளும் கடந்த போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடுகின்றன. வலுவான அணிகள் இடம் பிடித்துள்ள குரூப் 1 -பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது யார்? என்ற போட்டி சூடு பிடித்துள்ளது. 

ஆடும் லெவன் விவரம்... 

image

ஆஸ்திரேலியா!

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் சாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

இலங்கை!

குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), நிஸ்ஸங்கா, சரித் அசலங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்கா, பனுகா ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), கருணாரத்னே, துஷ்மந்த சமீரா, லஹிரு குமாரா, மஹீஷ் தீக்ஷனா. 

இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 7: 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்' - மரமும் மரம் சார்ந்த மகத்தான செயலி! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments