நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, பவுலிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணி முதல்முறையாக இந்த தொடரில் டாஸ் வென்றுள்ளது.
கடந்த போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 2016 மற்றும் 2021 என இரண்டு டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா தொடர்ச்சியாக ஆறு முறை டாஸை இழந்திருந்தது.
ஆடும் லெவன் விவரம்...
ஸ்காட்லாந்து!
ஜார்ஜ் முன்சி, கைல் கோட்ஸர் (கேப்டன்), மேத்யூ கிராஸ் (விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சஃப்யான் ஷெரீப், அலஸ்டெய்ர் எவன்ஸ், பிராட்லி வீல்.
இந்தியா!
கே.எல். ராகுல், ரோகித் ஷர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments