இந்திய கிரிக்கெட் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறி உள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு உலகக் கோப்பை வென்றுக் கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவ் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
“தேசிய அணிக்காக விளையாடுவதை காட்டிலும் ஐபிஎல் அணிக்காக விளையாடவே வீரர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது. அப்படி இருக்கின்ற நிலையில் நாம் அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தேசிய அணிக்காக விளையாடும் போது பெருமை கிடைக்கும். அவர்களது நிதி நிலை என்னவென்று எனக்குத் தெரியாது. அதனால் அதிகம் நாம் எதுவும் சொல்ல முடியாது.
பிரான்சைஸ் அணிகளுக்காக விளையாடுவதை காட்டிலும் தேசிய அணிக்காக விளையாடுவதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால் அவர்களை நான் ஐபிஎல் விளையாடக் கூடாது என்று சொல்லவில்லை. இப்போது அந்த பணியை திறம்பட செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் உள்ளது. இந்த முறை செய்துள்ள தவறே இந்தியா பெற்றுள்ள பெரிய பாடம். இனியும் இதை செய்யக் கூடாது” என சொல்லியுள்ளார். கோலி, ஐசிசி கோப்பை வெல்லாதது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு விதை போட்ட ஐசிஎல் (இந்தியன் கிரிக்கெட் லீக்) கிரிக்கெட்டை தொடங்கி வைத்தவர் கபில் தேவ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments