Advertisement

ஐபிஎல் 2022: லக்னோ அணியின் வழிகாட்டியாக நியமிக்கப்பட்ட கவுதம் கம்பீர்

எதிர்வரும் 2022 ஐபிஎல் சீசனில் புதிதாக உருவாகியுள்ள லக்னோ அணியை முன்னாள் இந்திய வீரர் மற்றும் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பீர் வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உறுதி செய்துள்ளார். 

2012 மற்றும் 2014 என் இரண்டு முறை கொல்கத்தா அணியை சாம்பியன் பட்டம் வெல்ல செய்துள்ளார் கம்பீர். 154 ஐபிஎல் போட்டிகளில் 4217 ரன்களை எடுத்துள்ளார் அவர். 

“மீண்டும் ஐபிஎல் களத்திற்குள் வந்திருப்பது மிகச்சிறப்பானது. என்னை லக்னோ அணியின் வழிகாட்டியாக நியமித்தமைக்கு கோயங்கா அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். வெற்றி பெற வேண்டுமென்ற நெருப்பு எனக்குள் இன்னும் அணையவில்லை. இந்த முறை டிரெஸ்ஸிங் ரூமில் இல்லாமல் வழிகாட்டியாக செயல்பட உள்ளேன்” என தெரிவித்துள்ளார் கம்பீர். 

தற்போது கிழக்கு டெல்லியின் நாடாளுமன்ற உறுப்பினராக கவுதம் கம்பீர் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம் : 'கிரிக்'கெத்து 14 : சச்சின் டெண்டுல்கரின் டாப் 5 ஒருநாள் இன்னிங்ஸ்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments