Advertisement

“வரும் ஆண்டுகளில் முகமது சாலா பாலன் டி ஓர் விருதை வெல்வார்” - மெஸ்ஸி நம்பிக்கை

கால்பந்தாட்ட உலகில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தலைசிறந்த வீரர்களுக்கு பாலன் டி ஓர் விருதை வழங்குவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான இந்த விருதை அர்ஜென்டீனாவின் மெஸ்ஸி வென்றுள்ளார். 2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2021 என 7 முறை இந்த விருதை மெஸ்ஸி வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

image

இந்த நிலையில் சக காலபந்தாட்ட வீரர் முகமது சாலா குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார் மெஸ்ஸி. 

“வரும் ஆண்டுகளில் எகிப்து வீரர் முகமது சாலா, பாலன் டி ஓர் விருதை  வெல்ல நிறைய வாய்ப்புள்ளது. அதே போல லெவன்டோவ்ஸ்கியும் இந்த விருதை வெல்வார் என எதிரபார்க்கிறேன். இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை தற்போது வெளிப்படுத்தி வருகிறார். அதனால் தான் சொல்கிறேன் இந்த விருதை வெல்ல அவர்களுக்கு நிறைய வாய்ப்புள்ளதென்று” என மெஸ்ஸி தெரிவித்துள்ளார். 

2021 பாலன் டி ஓர் விருதை வெல்வதற்கான ரேஸில் லெவன்டோவ்ஸ்கி இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். முகமது சாலா ஏழாவது இடத்தை பிடித்திருந்தார்.

இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 12: Friends2Support - ரத்தக் கொடையாளர், தேவைப்படுவோரை இணைக்கும் ஆப் 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments