Advertisement

நீரஜ் சோப்ரா பயிற்சியாளர் கிளாஸ் பார்டோனிட்ஸின் ஒப்பந்தம் 2024 ஒலிம்பிக் வரை நீட்டிப்பு!

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று கொடுத்தவர் நீரஜ் சோப்ரா. இந்நிலையில் அவருக்கு வரும் 2024 பாரிஸ் ஒலிம்பிக் வரை அவரது தற்போதைய பயிற்சியாளர் கிளாஸ் பார்டோனிட்ஸ் (Klaus Bartonietz) பயிற்சி அளிப்பார் எந்த தெரிவித்துள்ளது இந்திய தடகள கூட்டமைப்பு. 

image

அவரது வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி பெற நீரஜ் சோப்ரா ஆர்வம் காட்டியுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. 

“வரும் 2024 பாரில் ஒலிம்பிக் வரை ‘தங்கமகன்’ நீரஜீன் பயிற்சியாளராக கிளாஸ் பார்டோனிட்ஸ் செயல்படுவார். அதனை தற்போது தக்க வைத்துள்ளோம்” என இந்திய தடகள கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

கடந்த 2018 முதல் பயோ-மெக்கானிக்கல் வல்லுனரான கிளாஸ் பார்டோனிட்ஸ், நீர்ஜுக்கு பயிற்சி அளித்து வருகிறார். முன்னதாக கடந்த செப்டம்பரில் இந்திய ஈட்டி எறிதல் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த  உவே ஹோனை அந்த பொறுப்பில் இருந்து ‘செயல்பாடுகள் சரியில்லை’ என சொல்ல விடுவித்திருந்தது இந்திய தடகள கூட்டமைப்பு. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments