Advertisement

கடைசி நேரத்தில் விஹாரி நிதான ஆட்டம் - தென்னாப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் இலக்கு

இந்திய கிரிக்கெட் அணி ஜோகன்னஸ்பர்க் நகரின் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

image

இந்திய அணிக்காக ரஹானே (58 ரன்கள்), புஜாரா (53 ரன்கள்), விஹாரி* (40 ரன்கள்), ஷர்துல் தாக்கூர் (28 ரன்கள்) எடுத்திருந்தனர். இதில் விஹாரி இறுதி வரை தனது விக்கெட்டை இழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்க அணி சார்பில் ரபாடா, லுங்கி இங்கிடி மற்றும் மார்கோ ஜென்சன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். Olivier, ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். 

வாண்டரர்ஸ் மைதானத்தில் இதுவரையில் நடைபெற்றுள்ள டெஸ்ட் போட்டிகளில் 240 மற்றும் அதற்கும் மேற்பட்ட ரன்களை இரண்டு முறை மட்டும் சேஸ் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1991-இல் தென்னாப்பிரிக்க அணி மீண்டும் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்ததிலிருந்து 240+ ரன்களை வெற்றிகரமாக ஒரே ஒரு முறை மட்டுமே சொந்த மண்ணில் சேஸ் செய்துள்ளது. 

240 ரன்களை இலக்காக கொண்டு தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் தென்னாப்ரிக்க அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்துள்ளது. ஆடம் மார்கரம் 28 பந்துகளில் 24 ரன்கள் எடுத்துள்ளார். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments