Advertisement

ஒருநாள் போட்டித் தொடரை வெல்லுமா இந்தியா? தென்னாப்பிரிக்காவுடன் இன்று முதல் போட்டி

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் போட்டித்தொடர் இன்று தொடங்க உள்ளது.

தென்னாப்பிரிக்காவின் பார்ல் நகரில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியதால், கே.எல்.ராகுல் அணியை வழிநடத்துகிறார். ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர், இஷான் கிஷன், ஜெயந்த் யாதவ் போன்ற இளம் வீரர்கள் ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட அனுபவ வீரர்கள் என 15 பேர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

image

டெம்பா பவுமா தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்க உள்ளது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி ஏற்கெனவே டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும் என்பதால் முதல் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments