ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மலேசியாவில் அடுத்த மாதம் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன. சமீபத்தில் நடந்த இந்திய ஓபன் போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் லக்ஷயா சென், ஆண்கள் அணிக்கும், சையது மோடி சர்வதேச போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய வீராங்கனை மாள்விகா பன்சோட் , பெண்கள் அணிக்கும் தலைமை தாங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்தப்போட்டியில் இருந்து ஒதுங்கி இருப்பதால், இளம் வீரர், வீராங்கனைகளுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 'பும்ரா அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்' - பாரத் அருண் வெளிப்படை
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments