ஐபிஎல் அரங்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முகமாக பார்க்கப்பட்டவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என போற்றப்படும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ். இந்நிலையில் ஆர்.சி.பி அணிக்கு அவர் போட்காஸ்ட் பேட்டியில் அந்த அணிக்கும் தனக்கும் இடையே உள்ள பந்தம் குறித்து அவர் பகிர்ந்துள்ளார்.
இந்த போட்காஸ்டின் நெறியாளர், “பெங்களூரை சேர்ந்த ஆர்.சி.பி. ரசிகர்கள் உங்களுக்கு அப்பார்ட்மெண்ட் கொடுக்க முன்வந்தார்கள். இங்கேயே வந்துவிடுமாறும் சொல்லியிருந்தார்கள். இந்த நகரத்துடனான உங்களது நினைவுகள் குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்?” என கேட்கிறார்.
“எனக்கு இப்போது 3 பிள்ளைகள் உள்ளனர். அதனால் நிறைய அறைகள் இருக்க வேண்டும்” என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார் டிவில்லியர்ஸ்.
The RCB Podcast powered by Kotak Mahindra Bank: Trailer
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 1, 2022
10 episodes, plenty of interesting and never heard before stories about the tournament that made them the superstars they are!
(1/n)#PlayBold #WeAreChallengers #TheRCBPodcast pic.twitter.com/MWPQG3IEwH
தொடர்ந்து பேசிய அவர் “ஆர்.சி.பி அணிக்காக கிரிக்கெட் விளையாடுவது மட்டுமின்றி எனக்கும், இந்த அணிக்கும் ஆழமான பிணைப்பு உண்டு. இது மற்ற ஃப்ரான்சைஸ் அணிகளுடன் எனக்கு இருந்ததில்லை. அதனால் எனது நெஞ்சில் இந்த அணிக்கு தனியிடமுண்டு. இந்த அணியின் ரசிகர்கள் மற்றும் இந்த நகரத்துடன் எனக்கு பந்தம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments