Advertisement

”இந்திய அணியின் முதுகெலும்பு கோலி; நான் அவரது ரசிகர்” - பாக். வீரர் ஷாஹீன் அஃப்ரிடி!

2021 டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை செய்தது. அனல் பறந்த அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது. அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அஃப்ரிடி. ரோகித், கே.எல்.ராகுல், கோலி என இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழத்தியிருந்தார். 

image

இந்நிலையில் அந்த அனுபவம் குறித்து அவர் தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். 

“அணியில் பெரும்பாலான வீரர்கள் முதல் முறையாக உலகக் கோப்பை அரங்கில் இந்திய அணிக்கு எதிராக அந்த போட்டியில் விளையாடினோம். அது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. நாங்கள் கிரிக்கெட் விளையாடிய விதம் எங்களால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருந்தது. அணியிலிருந்த பவுலர்களில் ஒருவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை என்றாலும் அடுத்தவரால் முடியுமென நம்பினோம்.

image

நான் பந்து வீசிய என்டிலிருந்து லெக் சைட் பவுண்டரி லைன் மிகவும் சிறியது. 60 - 65 மீட்டர்கள்தான் இருக்கும். கோலிக்கு பந்தை வேகமாக வீசியிருந்தால் அவர் ரன் அடித்திருப்பார். அப்படி செய்யாமல் பந்துவீச்சில் வேரியேஷன் காட்டினேன். எனது நல்ல நேரம் கோலி அவுட்டானார். இந்திய அணியின் முதுகெலும்பு அவர். நான் அவரது ரசிகனும் கூட” என தெரிவித்துள்ளார் அவர்.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments