மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியை ரோகித் ஷர்மா கேப்டனாக வழிநடத்த உள்ளார். விராட் கோலி, அனைத்து விதமான கிரிக்கெட் பார்மெட்டிலிருந்தும் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ள நிலையில் இந்தத் தொடரில் ரோகித் அணியை வழிநடத்துகிறார்.
View this post on Instagram
வரும் 6-ஆம் தேதி இந்த தொடர் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ரோகித் ஷர்மா, இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் இந்த தொடர் குறித்து குறிப்பிட்டுள்ளார். “ஆரம்பிக்கலாங்களா... காத்திருக்க முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார். இளமை மற்றும் அனுபவம் கலந்த அணியாக இந்தியா இந்த தொடரில் விளையாட உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime
0 Comments