Advertisement

நான் ஏன் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியை பார்க்கவில்லை? - இம்ரான் கான் விளக்கம்

கராச்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் 171.4 ஓவர்கள் விளையாடி டிரா செய்தது பாகிஸ்தான். வரலாற்று சிறப்புமிக்க இன்னிங்ஸ் இது என சர்வதேச அளவில் போற்றப்பட்டு வருகிறது பாபர் அசாம் மற்றும் குழுவினரின் ஆட்டம். இந்நிலையில் இந்த போட்டியை தன்னால் பார்க்க முடியாமல் போனதற்கான காரணம் என்ன என்பதை விளக்கியுள்ளார் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் பிரதமருமான இம்ரான் கான். 

 

“தனது உலகத்தரம் வாய்ந்த பேட்டிங் திறனை வெளிப்படுத்தி அணியை தோல்வியிலிருந்து மீட்டு வந்த கேப்டன் பாபர் அசாமுக்கு எனது வாழ்த்துகள். மிகவும் நெருக்கடியான சூழலில் கேப்டன்சி நாக் ஆடியிருந்தார் பாபர். இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மற்ற வீரர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். குறிப்பாக ரிஸ்வான் மற்றும் ஷஃபிக்கிற்கு எனது வாழ்த்துகள். 

இந்த சிறப்பான போட்டியை என்னால் பார்க்க முடியாமல் போனது. ஏனெனில் வேறொரு மேட்ச் பிக்ஸிங்கில் எனது வீரர்களை அவர்கள் பக்கமாக இழுக்கும் பணி நடந்து வருகிறது. நான் அதனை எதிர்த்து போரிட்டு வருகிறேன்” என தெரிவித்துள்ளார் இம்ரான் கான். 

பாகிஸ்தான் நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழலை ஒப்பிட்டு இம்ரான் கான் பேசியுள்ளார் என்பதையே இது குறிக்கிறது. ஏனெனில் அவரது ஆட்சிக்கு எதிராக விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதை தான் மேட்ச் பிக்ஸிங் என குறிப்பிட்டு இம்ரான் கான் பேசியுள்ளார் என தெரிகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments