Advertisement

பயிற்சி முகாமில் பாலிவுட் பாடலுக்கு நடனம் - வைரலாகும் தவான், சாஹலின் ரீல்ஸ் வீடியோ

இந்திய அணியின் சீனியர் வீரர்களான ஷிகார் தவானும், சாஹலும் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசன் போட்டி, வரும் 26-ம் தேதி துவங்கி மே 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் சூப்பர் லீக் போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் நடைபெறுகிறது. இந்த சூப்பர் லீக்கின் துவக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பாண்டு ஐபிஎல் போட்டியில், புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து, 10 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் அட்டவணை வெளியிடப்பட்டது. இந்தப் போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் போட்டிகளில் மோதுகிறது. ஐபிஎல் போட்டிகள் துவங்க இன்னும் 17 நாட்களே உள்ளது.

image

இந்நிலையில், உடற்தகுதியை நிரூபிக்கும் வகையில், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் 10 நாள் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள வீரர்களுக்கு பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து ரஞ்சி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி உள்ளிட்டவைகளில் கலந்துகொள்ளாத 25 வீரர்கள், பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுடன் காயம் காரணமாக சிகிச்சை எடுத்து வரும் கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

image

அந்தவகையில், ஷிகர் தவான், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாகூர் ஆகியோர் பயிற்சி செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஷிகர் தவானும், சாஹலும் பாலிவுட் பாடல் ஒன்றுக்கு செய்த ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டுள்ளனர். இவர்கள் படிக்கட்டுகளில் பாடலுக்கு ரீல் செய்தபோது, படிக்கட்டுக்கு மேலிருந்த ஜன்னல் வழியாக புவனேஷ்வர் சிரிக்கும் காட்சிகளும் உள்ளன. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/shikhardofficial/?utm_source=ig_embed&ig_rid=82d18d84-bde4-4615-bfc9-9d2806c6f505

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments