Advertisement

இதற்கு பெயர்தான் துரதிருஷ்டமா! விநோதமாக அவுட்டான இஷான் கிஷான்.. வைரலாகும் வீடியோ!

நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்., மும்பை அணியின் இஷான் கிஷான் விநோதமான முறையில் அவுட்டாகி வெளியேறிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் வரலாற்றில் இந்த முறை நடைபெற்ற ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 15.25 கோடிக்கு இஷான் கிஷானை வாங்கியது. இது அந்த அணி ஒரு வீரருக்காக செலவு செய்த அதிகபட்ச தொகை ஆகும். முதல் இரு ஆட்டங்களில் அரைசதம் விளாசிய இஷான், தனது அணி தன் மீது வைத்த நம்பிக்கையை காக்கத் துவங்கினார். ஆனால் அது அடுத்தடுத்த ஆட்டங்களில் தூள் தூளாக நொறுங்கியது தான் சோகம்..!

Ishan Kishan's opening contribution of 54(43)

எட்டு போட்டிகள் விளையாடி உள்ள இஷான் கிஷானின் சராசரி 28.43, ஸ்டிரைக் ரேட் 108.15 மட்டுமே. கடைசி ஆறு ஆட்டங்களில் 26 ரன்களைக் கூட அவர் தாண்டவில்லை. தொடர்ந்து 7 தோல்விகளால் துயரத்தில் மூழ்கிய நிலையில், நேற்று பலம் வாய்ந்த லக்னோ அணியை எதிர்கொண்டது மும்பை அணி. கேஎல் ராகுலின் சதமடிக்க, மற்ற பேட்ஸ்மேன்களுக்கு மும்பை பவுலர்கள் கடும் நெருக்கடி தந்ததால் 168 ரன்களையே 20 ஓவர்கள் முடிவில் குவித்தது லக்னோ.

169 ரன்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணிக்கு ரோகித் ஷர்மா சிறப்பாக விளையாடி துவக்கம் தர, அவருக்கு துணையாக இஷான் கிஷன் நிலையான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்கொண்ட முதல் 19 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே எடுத்து மிகப் பொறுமையாக ஆடினார் இஷான். ஆனால் ரவி பிஷ்னாய் வீசிய பந்தில் எதிர்பாராதவிதமாக இஷான் கிஷன் விநோதமாக அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

Ishan Kishan dismissal against LSG | Ishan Kishan gets out in bizarre fashion as inside edge off his bat rebounds off Quinton de Kock's boot before being caught at slip

தூரமாகச் சென்ற பந்தை இஷான் அடிக்க, பந்து எட்ஜ் ஆகி லக்னோவின் விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கின் ஷூவில் பட்டு, எகிறி முதல் ஸ்லிப்பில் இருந்த ஜேசன் ஹோல்டரிடம் கேட்ச் ஆனது. மூன்றாம் நடுவர் இந்த அவுட்டை உறுதிசெய்ய நடையைக் கட்டினார். கூடவே மும்பையின் வெற்றியும் நடையைக் கட்டிவிட்டது. இஷான் கிஷன் விநோதமான அவுட்டான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments