Advertisement

கொரோனா தலைதூக்கிய டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் இன்று பலப்பரீட்சை

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொரோனா தலைதூக்கியுள்ள டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஐபிஎல் 2022 போட்டியில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான மோதலுக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சிலருக்கு உறுதியான கொரோனா தொற்றுகள் சிறிது குழப்பத்தை உருவாக்கியுள்ளன. மிட்செல் மார்ஷ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் உதவி ஊழியர்களின் நான்கு உறுப்பினர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இன்று காலையில் மற்றொரு சுற்று சோதனைக்குப் பிறகு கூடுதல் முடிவுகள் எடுக்கப்படும். இருப்பினும் புனேயில் நடைபெறவிருந்த மோதல் தற்போது மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது.

IPL 2022 - Covid-19 - Punjab Kings and Delhi Capitals to face off in Mumbai instead of Pune

டெல்லி அணி இதுவரை ஐந்து ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளுடன் சிறந்த தொடக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. கடைசி ஆட்டத்தில் ஆர்சிபிக்கு எதிராக 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய போதிலும், மிடில் ஆர்டர் தொடர்ந்து சொதப்புவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

முக்கியமான எண்.3 ஸ்லாட்டில் ஐந்து போட்டிகளில் நான்கு பேட்ஸ்மேன்களை பயன்படுத்தியது டெல்லி அணி. யாரும் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பஞ்சாப் பேட்ஸ்மேன்களின் ஆக்ரோஷத்தை எதிர்கொள்வது டெல்லி பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியாக இருக்கும். மார்ஷ் இல்லாததால், பேட்டிங்கை பலப்படுத்த டெல்லி அணி நார்ட்ஜே அல்லது டிம் சிஃபெர்ட்டை மீண்டும் அழைத்து வரலாம். தவான் அச்சுறுத்தலை குறைக்க குல்தீப் பவர்பிளேயில் பந்துவீச வாய்ப்பு உள்ளது.

IPL 2022 - Two more Covid-positive cases in Delhi Capitals camp

மறுபக்கம் பஞ்சாப் பவர்பிளேயில் மிகவும் ஆக்ரோஷமான அணியாகும். பவர்பிளேவில் ஒரு ஓவருக்கு சராசரியாக 9.81 ரன்கள் எடுத்துள்ளது . ஆனால் டெத் ஓவர்களில் பஞ்சாப் பின்னடைவையே சந்தித்து வருகிறது. அதன் டெத் ஓவர் சராசரி 9.22. மற்ற அணிகளுடன் ஒப்பிட்டால் இது மிகக் குறைவு. ஒரு நல்ல பவர்பிளேக்குப் பிறகு, அவர்கள் மிடில் ஓவர்களில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்துள்ளனர். இங்குதான் பஞ்சாப் அணி தன் வசமுள்ள ஆட்டத்தை இழக்கிறது. லியாம் லிவிங்ஸ்டனைத் தவிர, மற்ற மிடில் பேட்ஸ்மேன்கள் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஷாருக் கான் மற்றும் ஒடியன் ஸ்மித் டெத் ஓவர்களில் அடித்து விளையாட முயற்சித்தபோதிலும், அது எடுபடாமல் போகிறது. தோல்வியில் இருந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப இரு அணிகளும் தீவிரமாக முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

Explained: How PBKS Can Still Qualify For IPL 2021 Playoffs

இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்:

டெல்லி கேப்பிடல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர்,அன்ரிச் நார்ட்ஜே, ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தாபிசுர் ரஹ்மான், கலீல் அகமது

பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments