Advertisement

'சென்னைக்கு அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னைக்கு அருகே பிரமாண்ட விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல அரசு முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும், இதற்காக நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம், 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக் தங்கம் தேடுதல் திட்டம், 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் தலா மூன்று கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னையில் 10 கோடி ரூபாய் செலவில், நவீன தொழில்நுட்பங்களோடு கூடிய குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் எனவும், பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை ஊக்கப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஏடிபி சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் மற்றும் பீச் ஒலிம்பிக்ஸ் தொடரை மீண்டும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் கூறினார்.

image

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கென தனியாக பிரமாண்டமான மைதானம் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 44ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதால், விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக வளர்ந்து சிறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: காரை எடுத்துக்கோங்க... ஆனா கமலாலயம் போயிறாதீங்க...! - உதயநிதி பேச்சால் சிரிப்பலை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments