Advertisement

'160 கிமீ வேகத்திற்கு மேல் பந்து வீசியுள்ளேன்; ஆனால்...' – புலம்பும் பாகிஸ்தான் பவுலர்

'நான் 160 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இரு முறை பந்து வீசி இருக்கிறேன். ஆனால் அவை கணக்கிடப்படவில்லை' எனக் கூறுகிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி, 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளையும், 87 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 121 விக்கெட்டுகளையும், 13 டி20 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருக்கிறார். 2016 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் முகமது சமி எந்தவித போட்டியிலும் விளையாடவில்லை.

image

இந்த நிலையில், தான் ஒரு போட்டியில் 160 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இரு முறை பந்து வீசியதாகவும், ஆனால் அவை முறையாக கணக்கிடப்படாததால் தான் வீசிய உண்மையான வேகம் அனைவருக்கும் தெரியாமல் போனது என்றும் கூறியிருக்கிறார் முகமது சமி. இதுகுறித்து அவர் கூறுகையில், உண்மையாகவே நான் 164 மற்றும் 162 கிலோ மீட்டர் வேகத்தில் இருமுறை பந்து வீசி இருக்கிறேன். ஆனால் அப்போது பவுலிங் வேகத்தை கண்காணிக்கக் கூடிய கருவி சரியாக வேலை செய்யாததால் அவை கணக்கிடப்படவில்லை. ஐசிசி தரப்பிலிருந்து கூட இது சம்பந்தமாக அறிவிப்பு ஒன்று வெளியானது. வேக கண்காணிப்பு கருவி சரியாக வேலை செய்யவில்லை; அதனால் வேகத்தை துல்லியமாக கணக்கிட முடியவில்லை என்று அவர்கள் ஒரு சமயத்தில் கூறினார்கள். அதன் காரணமாகவே நான் வீசிய அந்த 164 மற்றும் 162 கிலோமீட்டர் வேகம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் போய்விட்டது'' என்று தற்போது முகமது சமி கூறியுள்ளார்.

image

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரையில் அதிவேகமாக பந்து வீசிய பவுலராக பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷோயப் அக்தர் வலம் வந்து கொண்டிருக்கிறார். 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் அவர் வீசிய பந்து தான் இப்போதுவரை ஒரு பவுலர் அதிவேகமாக வீசப்பட்ட பந்தாக அதிகாரப்பூர்வமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: சோகமடைந்த ரோகித் மனைவியை கட்டியணைத்து ஆறுதல் கூறிய அஸ்வின் மனைவி! ஸ்டேடியத்தில் அன்பு மழை



Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments