Advertisement

தொடரை வெல்லப்போவது இந்தியாவா? தென் ஆப்பிரிக்காவா?- பெங்களூரில் 'ட்விஸ்ட் ' வைக்குமா மழை?

தொடரை முடிவு செய்யும் கடைசி  டி20 போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன.  

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவும், அடுத்த இரு ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது. இந்த நிலையில், தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை முடிவு செய்யும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு நடைபெறுகிறது.

image

கடைசி இரு ஆட்டங்களிலும் இந்திய அணி பந்து வீச்சில் சிறப்பான முன்னேற்றத்தை கண்டிருக்கிறது. புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அக்சர் படேல், அவேஷ்கான், யுஸ்வேந்திர சாஹல் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்கின்றனர். பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா நல்ல ஃபார்மில் உள்ளனர். இவர்கள் மீண்டும் தங்களது பொறுப்பான ஆட்டத்தை தொடர்வார்கள் என நம்பலாம். மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயர் எழுச்சி பெற வேண்டும். கேப்டன் ரிஷப் பண்ட்டும் பேட்டிங்கில் தொடர்ந்து ஏமாற்றுகிறார். தொடரை வெல்லக்கூடிய முக்கியமான ஆட்டம் என்பதால் இவர்கள் இருவரும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட முயற்சிக்கக்கூடும்.

image

முதல் இரு ஆட்டங்களில் பேட்டிங்கில் மிரட்டிய தென் ஆப்ரிக்கா அணி கடைசி இரு ஆட்டங்களிலும் தொடர்ந்து சொதப்பியது. ஆனாலும் தென் ஆப்ரிக்காவை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த அணி மறுபடியும் மிரட்ட முயற்சிக்கலாம். இரு அணிகளுமே கடைசி ஆட்டத்தில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி. குறைவான பவுண்டரி தூரத்தை கொண்ட பெங்களூரு மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கு சாதகமாகவே இருக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட் (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌சர் பட்டேல், அவேஷ்கான், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல்.

தென் ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்) அல்லது ரீஜா ஹென்ரிக்ஸ், பிரிட்டோரியஸ், வான்டெர் டஸன், டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), கேஷவ் மகராஜ், ரபடா, மார்கோ ஜேன்சன் அல்லது வெய்ன் பார்னெல், அன்ரிச் நோர்டியா, இங்கிடி அல்லது ஷம்சி.

இதையும் படிக்கலாமே: நீங்கள் அனைவருக்கும் முன்மாதிரி - தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்து தள்ளிய ஹர்திக் பாண்டியா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments