Advertisement

அடை மழையிலும் பாய்ந்த ஈட்டி..! தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

பின்லாந்து சர்வதேச ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

பின்லாந்தில் நேற்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் முதல் முயற்சியில் 86.69 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார். அடுத்த முயற்சியில் 'பவுல்' செய்தார். மூன்றாவது முயற்சியில் தடுமாறி விழுந்த இவர், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். கடைசி 3 முயற்சிகளில்  ஈட்டி எறியவில்லை. எனினும் இந்த இலக்கை பின்னர் வந்த பிற போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை. எனவே இப்போட்டியில் அதிக தூரம் ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் கிடைத்தது.

image

இந்தப் போட்டியில் டிரினிடாட்டின் கேஷோர்ன் வால்காட் 86.64 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கமும், ஆண்டர்சன் பீட்டர்ஸ் 84.75 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர். முன்னதாக போட்டியின்போது தொடர் மழை பெய்ததால் ஈட்டி எறியும் வீரர்கள் அனைவருக்கும் சற்று சிரமம் ஏற்பட்டது.

தங்கப்பதக்கம் வென்றபின் பேட்டியளித்த நீரஜ் சோப்ரா, ''டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு நான் பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். கடந்த வாரம் பின்லாந்தில் நடந்த மற்றொரு போட்டியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்த வெற்றிகள் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் உத்வேகத்துடன் செயல்படுவதற்கு உதவும்'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: ரிஷப் பண்ட்டா? தினேஷ் கார்த்திக்கா? இருவரில் யாருக்கு வாய்ப்பு? - ஸ்டெய்ன் நச் பதில்




Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
via TamilSportsTime

Post a Comment

0 Comments